1000 ருபாய்க்கு கூட்டமைப்பு ஒத்துளைக்கும்


“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்கும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழர்களின் பெருமளவிலான நிலங்கள் கபளீகரம் செய்யப்படாமைக்கு மலையக மக்களே காரணம் எனவும், எனவே, மலையக மக்களின் போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments