ஆமிக்கு முன்னுரிமை:சிந்திக்குமா கூட்டமைப்பு!


வடக்கில் இராணுவப்பிரசன்னத்தை பேண ரணில் அரசும் காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளது.மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை முடக்கி இராணுவத்தை அதன் பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மும்முரமாகியுள்ளது.

இலங்கைப்பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வெள்ள அழிவுகளின் நிலைமைகளை தொடர்ப்பில் ஆராயும் கலந்துரையாடலின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும்முகமாக 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதேச சபைகள் இருக்கின்றன அவற்றை அவர்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தை கொண்டு செய்வதாயின் பிரதேச சபைகளை முடிவிடுமாறு பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளினை இயக்க உதவ தயாராக இல்லாத ரணில் அரசு மறுபுறம் அதன் பணிகளை படையினரை ஈடுபடுத்தி சேறுபூசுவதாக கரைச்சி பிரதேசசபை தலைவர் வேழமாலிதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதே குற்றச்சாட்டை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தலைவர் சுரேனும் முன்வைத்துள்ளதுடன் ரணிலுக்கு காவடியெடுத்த கூட்டமைப்பு தலைமை இது பற்றி சிந்திக்கவேண்டுமெனவும் கோரியுள்ளார். 

No comments