கூட்டமைப்பு இரட்டை பிரஜா உரிமை:ரணிலிடம் தீர்வு!


கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது இரட்டை குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களை தீர்த்துவைக்க ரணிலுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாணமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட மூவரிற்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்று தென்னிலங்கை கடும்போக்கு அரசியல் வாதிகளால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் உச்சநீதிமன்றத்தை நாடி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாமலாக்குவோம் என்று மஹிந்த தரப்பால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறான இரட்டைக் குடியுரிமை தனக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவருக்கும் இல்லை என சுமந்திரன் வெளியே கூறிவருகின்ற போதும் மறுபுறம் ரணிலுடன் பேசப்பட்டதை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

தற்போதுள்ள சபாநாயகர் ஜக்கிய தேசியக்கட்சி சார்ந்தவர்.ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் பதவியை பறித்து மஹிந்தவிடம் வழங்கியமை தொடர்பில் கூட்டமைப்பு சீற்றங்கொண்டுள்ளது.அதனால் இரட்டை குடியுரிமை விவகாரத்தை கையிலெடுக்கவேண்டாமென சபாநாயகரிடம் ரணில் கோரியிருப்பதனையும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.  

No comments