மகிந்தவின் மொட்டால் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டது சுதந்திரக்கட்சி


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு  ஶ்ரீலங்கா  சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற சு.கவின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இனிவரும் காலப்பகுதியில் இவ்விரு கட்சிகளும் பொதுச்சின்னத்தின்கீழேயே தேர்தலுக்கு முகம்கொடுக்கும். நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் சந்திரிக்கா பங்கேற்கவில்லை. அவருக்கு சு.க. தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

இலங்கையில் பிரதான இருகட்சிகளுள் ஒன்றாக சுதந்திரக்கட்சி 50 களில் இருந்து விளங்கியது. ஐக்கிய தேசியக்கட்சி அவ்வாறு இல்லாவிட்டால் சுதந்திரக்கட்சியே நாட்டை ஆளும் நிலைகாணப்பட்டது. உலகுக்கு முதல் பெண் பிரதமரையும், ஜனாதிபதியையும் தந்த கட்சியாகும் அது.

சு.கவுடன் இணைந்து கூட்டணி அமைக்கவே ஏனைய கட்சிகள் முயற்சிக்கும். ஆனால், இன்று மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின்கீழ் சு.க. மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனைய கட்சியை தேடிச்சென்று கூட்டணி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், சுதந்திரக்கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

No comments