வடமாகாண முன்னாள்களிற்கு புதிதாகவொரு சங்கம்!


வடமாகாணசபை கலைக்கப்பட்டுவிட்டாலும் அதனால் மக்களிற்கு ஏதும் கிடைத்ததோ இல்லையோ அமைச்சர்கள் முதல் உறுப்பினர்கள் வரை கல்லா கட்டியே இருந்தனர்.

ஆனால் தற்போது சபை கலைக்கப்பட்டுவிட்ட போதும் அதனை கைவிடமுடியாது அல்லாடுபவர்களில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முதல் முன்னாள் அமைச்சர்கள் சத்தியலிங்கம் மற்றும் குருகுலராஜா ,சயந்தன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கங்கள் அமைப்பது போல தற்போது வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் சங்கம் ஒன்றை அமைத்துள்ளனர்.

கிளிநொச்சியில் முன்னாள் அமைச்சர் குருகுலராஜா வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இது தொடர்பில் தான் தொடர்ந்தும் குந்தியிருக்கின்ற மாகாண பேரவையில் அவர் அறிவிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் முன்னாள் அமைச்சர்களில் குருகுலராஜா மற்றும் சத்தியலிங்கம் ஆகியோரே பங்கெடுத்த போதும் பின்னர் அமைச்சராகியிருந்த அனந்தி,ஜங்கரநேசன் உள்ளிட்டோர் பங்கெடுத்திருக்கவில்லையென தெரியவருகின்றது.

ஆட்சியிழந்த பின்னர் மாகாணசபை அதிகாரிகள் முதல் சாதாரண தொழிலாளி வரை தம்மை கண்டுகொள்ளாதிருக்கின்றமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் முன்னைய மாகாணசபை தீர்மானங்ளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குவதே முன்னாள் சங்கம் அமைக்கப்பட காரணமென தெரியவருகின்றது. 

No comments