வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே வீட்டிற்கு போகின்றார்?


வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பதவியிலிருந்து எந்நேரமும் பதவி நீக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.ஜனாதிபதி மைத்திரி தனது வெளிநாட்டுப்பயணத்திற்கு முன்னதாக இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

தொடர்ந்தும் மஹிந்தவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருவதாக சொல்லப்படும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் அடிப்படையில் அவருட்பட கிழக்கு ஆளுநரும் இடமாற்றப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைத்து மாகாண ஆளுநர்களையும் ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம் ஆளுநர்களை மாற்றும் திட்டமொன்றை மைத்திரி அமுல்படுத்தவுள்ளார்.

அதிலும் தற்போதைய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தனது வதிவிடத்தில் நடத்தியதாக சொல்லப்படும் இரகசிய கூட்டமொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற புலனாய்வு அறிக்கையின் பிரகாரமே முதலில் அவரை பதவி நீக்க மைத்திரி திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்;பாக தன்னை சூழ இணைத்துக்கொண்டுள்ள நபர்கள் அனைவரும் மஹிந்த காலத்து விசுவாசிகள் எனவும் புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments