பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகினார் மகிந்த ராஜபக்ச!!

பிரதமர் பதவியிலிருந்து நான் பதவி விலகி விட்டேன் என அறிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றில் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், அவர் இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியிலிருந்து இன்று (15) பதவி விலகவுள்ளதாக மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றுத் தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments