ஆளுநர் பதவிகளில் மாற்றம்


அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்றும், தற்போது ஆளுநர் பதவிகளில் உள்ளவர்களில் மூவரின் பதவி பறிபோகலாம் என்றும் தெரியவருகிறது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மாகாண ஆளுநர்களுக்குமிடையிலான சந்திப்பு ஜனவரி முற்பகுதியில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் பின்னரே, ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஒரு சிலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. அத்துடன், புதிய சிலருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே மூன்று பேரின் பதவி பறிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. குறித்த மூவரின் பெயர் விபரம் இன்னும் வெளியாகிவில்லை.

No comments