சந்திரிக்கா தலைமையில் சு.க எம்பிக்கள் அணி உருவாகிறது


ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 எம்.பிக்கள் விரைவில் ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளிக்ககூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைவிடுத்து, சந்திரிக்கா தலைமையில் செயற்படுவது தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதனால், கொழும்பு அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சுதந்திரக்கட்சியை முழுமையாகக் கைப்பற்றிவிடவேண்டும் என்பதிலும் மேற்படி தரப்பு குறியாக இருப்பதாக தகவல்.

அதேவேளை, இத்திட்டத்தை தடுக்கும் முயற்சியில் மைத்திரியின் சகாக்கள் இறங்கியுள்ளனர். இதன்படி புதுவருடத்தில் சுதந்திரக்கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

No comments