ரணிலுக்கு ஆப்பு: துருப்பு சீட்டு விஜயகலா?


பிரதமர் மஹிந்தவை தொடர்ந்து கதிரையிலிருத்தி பார்க்க இந்திய பத்திரிகையான இந்து முன்னின்று செயற்படுகின்றதாவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக்கினால் அவர் சுயாட்சியை தருவதற்கு தயாராக இருப்பதாக யாழ் மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இந்திய த ஹிந்து நாளேடுக்கு தெரிவித்துள்ளதாக செய்தியொன்றை அது பிரசுரித்துள்ளது.

நாடு அரசியல் ரீதியாக அசமந்த நிலையை அடைந்துள்ள நிலையில், மேற்படி கருத்து தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக மாறியுள்ளதுடன், சிங்களப்பத்திரிகைகள் இது தொடர்பில் பெரிதும் சாடியுள்ளது. 

முன்னதாக விடுதலைப்புலிகளை மீள எழுச்சி கொள்ள வைக்கப்போவதாக அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.இதன் தொடர்ச்சியாக தனது அமைச்சு பதவியினை இழந்த அவர் பின்னர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மஹிந்த தரப்புடனும் நெருங்கிய உறவை கொண்டுள்ள அவர் திட்டமிட்டே விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி பற்றிய கதைகளை அவிழ்த்துவிட்டதாக பேசப்பட்டிருந்தது.

தற்போது ரணில் தமிழீழம் தருவாரென்ற அவரது புதிய கதையும் அத்தகைய பின்னணியில் இந்திய ஊடகத்தில் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மஹிந்தவை ஆட்சி பீடமேற்றும் விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி முன்னின்று செயற்பட்டதுடன் மைத்திரியை கொல்ல ரணில் முற்பட்டதான செய்தியையும் இந்து நாளிதழே அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments