தடையினை உடைத்து பருத்தித்துறையில் நினைவேந்தல்!

வடமராட்சியின் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் மாவீரர் தின ஏற்பாடுகளை இலங்கை காவல்துறை தடுத்து நிறுத்திய போதும் அதனை தாண்டி மக்கள் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவேந்தலை நடத்தியுள்ளனர்.

இன்று மாலை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே அங்கு சென்ற பருத்தித்துறை காவல்துறையினர் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன் துப்பாக்கி முனையில் மக்களை அச்சுறுத்தி கலைத்துள்ளனர். 

அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளை அறுத்தெறிந்தும், வைக்கப்பட்டிருந்த 
மாவீரர்களது சிவில் உடையிலான  புகைப்படங்களை அப்புறப்படுத்துமாறும் 
பொது மக்களை அச்சுறுத்திய காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றியுமுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

இந்நிலையில் மக்கள் திரண்டு உடனடியாக அருகிலுள்ள மண்டபமொன்றிற்கு நிகழ்வை மாற்றியதுடன் திட்டமிட்டது போன்று மாவீரர் நினைவேந்தலை நடத்தியும் முடித்துள்ளனர்.

 #Point Pedro #Suppermadam #சுப்பர்மடம்






No comments