பொறுப்பேற்க தயார்:சஜித் அறிவிப்பு


கட்சியின் தலைமையினாலும், கட்சியின் மத்திய செயற்குழுவினாலும் தன்னிடம் தலைமைத்துவப் பொறுப்பு சுமத்தப்படின் அதனை ஏற்று முன்கொண்டு செல்ல தான் தயாராகவே உள்ளேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கண்டியில் இன்று (24) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
நாட்டுக்காக தன்னுடைய உயிரைக் கொடுத்தேனும் பணியாற்றுவேன். தோற்கடிக்க முடியாது என்று கூறிய ஜனாதிபதியை நாம் தோற்கடித்தோம் அல்லவா?. நாம் ஒன்றுபட்டால், அனைத்தும் சாத்தியமாகும். நம்பிக்கையுடன் இருந்தால், அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வெற்றி பெறுவது நாம் தான் எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments