Header Shelvazug

http://shelvazug.com/

மறவன்புலோவை நாயென்ற இரா.துரைரத்தினம்!


நீ ஒரு தமிழனா? சிங்களவனோட அரைக்காற்சட்டையோட நக்கிற நாய் நீ. இனிமேல் தமிழனைப்பற்றி கதைக்க கூடாதென தன்னிடம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் இராமசாமி துரைரத்தினம் (இரா.துரைரத்தினம்) தெரிவித்துள்ளதாக மறவன்புலோ சச்சிதானந்தம் விளக்கமளித்துள்ளார்.நேற்றைய தினம் பலாலியில் நிகழ்வொன்றில் பங்கெடுத்தமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களின் போதே இரா.துரைரத்தினம் தன்னிடம் இத்தகைய வினாக்களைத் தொடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து வெளியேறி சுவிஸில் வாழ்ந்துவரும் இரா.துரைரத்தினம் எழுப்பிய வினாக்களையும் தனது பதிலையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இரா.துரைரத்தினம் : மைத்திரிக்கு ஏசினால் உங்களுக்கு ஏன் கோவம் வருகிறது?

மறவன்புலோ :பகைகோ  என்றால் யப்பானிய மொழியில் அந்நியர் என்று பொருள். தோக்கியோவில் தெருவில் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் என்னிடம் முரண் தொனியில் ஏதோ தன் மொழியில் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு முன்பின் அறிமுகமில்லாத அந்த வழியே போன யப்பானியர் இருவர் அங்கு வந்தனர். நான் வெளிநாட்டவன் என்பதைத் தெரிந்ததும் கோபக்கனலுடன் ஓட்டுநரைத் திட்டினர். கைகோ என்ற சொல்லை அவர்கள் பலமுறை கூறினர். ஓட்டுநர் விட்டகன்றார். யப்பானியர் என்னிடம் மென்மையாகப் பேசினர். ஓட்டுநரை சொன்னதைப் பொருட்படுத்தவேண்டாம் என்றனர்.

தெருவில் போகும் யப்பானியர் எவரும் அயலவரைத் திட்டினால் அந்நியரை முறைத்தாலே தம் பண்பாட்டுக்கு இழுக்கு எனத் தேசிய உணர்வுள்ள யப்பானியர் கருதுவர். 

திருடன் எனச் சொல்லியும் ஒருமையில் விளித்தும், அயலவரை அந்நியரைத் திட்டுவது தமிழர் மரபாவதில்லை. இனிய உளவாக இன்னாத கூறல் என்பார் வள்ளுவர். திட்டியவரோ தமிழரின் சார்பாளர். தமிழருக்காகப் பேசுபவர். அவரின் சுட்டுப் பொருள் சிங்களவரின் தலைமைச் சார்பாளர். 

தமிழர் சிங்களவரைத் திட்டுவதான பொருளைத் தரவல்லது. என் சார்பாளர் இவ்வாறு கூறுவது பொருத்தமற்றது என நான் கருதினேன். அதன் விளைவுகள் மீண்டும் ஓர் இனக்கலவரத்துக்கு வித்திடலாம் எனவும், தமிழருக்கு மீண்டும் துன்பம் நேரலாம் எனவும் கருதினேன்.

இரா.துரைரத்தினம்: நீ ஒரு தமிழனா? சிங்களவனோட அரைக்காற்சட்டையோட நக்கிற நாய் நீ. 

மறவன்புலோ: அரைக் காற்சட்டையுடன் போகவேண்டிய சூழலை விளக்குகிறேன்.மழை கொட்டியது 
கால் வரை  நீண்ட உடைகளான வேட்டியோ நீளக் காற்சட்டையோ நனைந்தால் காய்வதற்கு என உடல் சூடும் பயனாகும். உடல் குளிரும். தொலைவில் உள்ள கால்களுக்குக் குருதியை வேகமாக அனுப்ப இதயம் வேகமாகத் துடிக்கும். இரத்த அழுத்தம் கூடும்.
எனக்கு நோய் வரும். என் வயதுக்கு நோய் வந்தால் மற்றவருக்குப் பாரமாவேன்.
என்னை அழைத்தோர் கொடிகாமம் பெண்கள் அமைப்பினர். படைமுகாமுக்குள் போக அவர்களுக்கே இயல்பான அச்சம். மனத்தில் படைச்சூழல் தரக்கூடிய நெருடல்.

தோட்டப் பணியில் இருந்தேன். அதை இடை நிறுத்திப் பெண்கள் அமைப்புக்காகப் பலாலிப் படைமுகாம் சென்றேன்.படைத் தளபதி அழைத்துத் தன்னருகில் அமர்த்தினார்.

200 பெண்கள் வரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து படையினரிடம் பொதி (துணி மணி போலும்) பெற்றனர். நண்பகல் விருந்தில் பங்கேற்றனர்.
அப்பெண்கள் தாமே குடுமபத்துக்குத் தலைமை தாங்கும் இல்லக் கிழத்திகள் என அறிந்தேன். சாய்வு நாற்காலிக் கருத்துரிமையைப் பெரிதும் மதிக்கிறேன். ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரின் கருத்துகள் பெறுமதியானவை.


இரா.துரைரத்தினம் : நீ ஒரு தமிழனா? சிங்களவனோட அரைக்காற்சட்டையோட நக்கிற நாய் நீ. இனிமேல் தமிழனைப்பற்றி கதைக்க கூடாது. ஐயா நீங்கள் இலங்கையரா இந்தியரா அல்லது சிறிலங்காவின் கைக்கூலியா? 

மறவன்புலோ: இந்த வினாக்கள் உங்கள் உள்ளத்தின் மனோநிலையின் வெளிப்பாடு. வெளிப்படுத்தி மனப் பாரத்தைக் குறைத்துக் கொண்டீர்கள், மகிழ்ச்சி. 

No comments