தேர்தலிற்கு தயார்:ரணில் சவால்!


சட்டரீதியான அரசாங்கத்தின் கீழ் சட்டரீதியாக நடத்தப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எனினும் அதிகாரமின்றி அட்டைபோன்று ஓட்டிக்கொண்டிருப்பவர்களை நீக்க தயார் எனவும் ரணில் எச்சரித்துள்ளார்.

கண்டியில்  இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ராஜபக்ச - மைத்திரி தரப்பிற்கு பெரும்பான்மை இல்லை என்பதனை ஏற்றுக் கொள்ள நேரிட்டது.உலகில் எந்த ஒரு சபாநாயகரும் முகம் கொடுக்காத பிரச்சினைகளுக்கு எங்கள் சபாநாயகர் முகம் கொடுத்தார்.

இந்த கும்பலினால் தேர்தலுக்கு வர அச்சப்படுவது இன்று உலகிற்கு தெரியும்.நான் பிரதமராக இருக்கும் போது மஹிந்த ராஜபக்ச பிரதமராக்கப்பட்டார். சட்டவிரோதமாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். நாடாளுமன்றத்தை கூட்ட இடமளிக்கவில்லை.மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொண்டார்கள். நாங்கள் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தோம். இறுதியில் பொலிஸாரை அழைத்து வந்து கட்டுப்படுத்த வேண்டிய நிலை சபாநாயகருக்கு ஏற்பட்டதென ரணில் மேலும் தெரிவித்து்ளார்.

No comments