ரணில் வந்தார்: மஹிந்த வெளியேறினார்!


இன்று நடந்தது..
உயர் நீதிமன்றின் நேற்றைய முடிவுக்கு அமைய, இன்று காலை 8.30 அளவில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. பின்னர் 10 மணிக்கு நாடாளுமன்றம் ஆரம்பமானது.
அதற்கு முன்னர் மு.பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒக்டோபர் 26ம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக அலரிமாளிகையில் இருந்து வெளியில் வந்ததுடன்,நாடாளுமன்றத்துக்கு சென்ற அவர், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களது கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
ஜனாதிபதி இன்றைய சபை அமர்விற்கு சமுகமளிக்கவில்லை.
பிரதமர் மகிந்தராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சியின் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.
10 மணிக்கு சபை அமர்வு ஆரம்பமானது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, நாடாளுமன்ற அமர்வை மீளக்கூட்டுவதற்கான வர்த்தமானி ஆவணத்தை வாசித்தார்....
நிலையியல் கட்டளைகளை ரத்து செய்வதற்கான யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்தார்....
இதற்கு எதிராக, சபையை நாளை வரையில் ஒத்திவைக்க சபை முதல்வர் தினேஸ் குணவர்தன யோசனை முன்வைத்தார்.
சுமந்திரன் முன்வைத்த நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் அமைதியின்மை அதிகரித்தது...
பிரதமர் மகிந்தராஜபக்ஷ நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேறினார்....
மனுஷ நாணயக்கார, ஏ.எச்.எம். ஃபௌசி மற்றும் பியசேன கமகே ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் அமர்ந்தார்கள்.

ஜேவி பி முன்வைத்த அவநம்பிக்கை பிரேரணையை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆளுங் கட்சியில் பெரும்பான்மை இல்லை என்பது தமக்கு புரிகிறது என்றும் கூறினார்.
ஆனால் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்த முடியாது என்பதால், மொத்தமாக இந்த யோசனைக்கு ஆதரவாளர்களை கோசமிடுமாறு சபாநாயகர் கோரினார்.
இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியினரும், ஜே.வி.பி முதலான கட்சியினர் ஹு கோசம் எழுப்பினார்கள்...
நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் பிற்போடப்பட்டுள்ளது....
நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல சபைக்கு வெளியில் வந்து ஊடகங்களிடம் தெரிவித்தார்..

No comments