எம்.பிக்கள் விலைபேசப்பட்டமை தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை


கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை தீர்மானித்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கை தொடர்பாக சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில் செயற்பட பொறுப்பாகவுள்ள இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவிடம் விரைந்து செயற்படுமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வலியுறுத்துகின்றது.

கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக TISL நிறுவனம் இலஞ்ச மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

மேலும், அமைச்சர்களுக்கு இலஞ்சம் வழங்குதல் அல்லது அமைச்சர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ளுதல், இலஞ்ச ஊழல் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம் 7 வருட கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர, ‘இவ்வாறு இஞ்சம் வழங்குவதற்கு பல்வேறு தரப்பினர் முயற்சித்துள்ளதாக ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதோடு, இது தொடர்பாக குறிப்பிடத்தக்க சாட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது எனவும் இவ்வாறனதொரு பின்புலத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக இலஞ்ச ஊழலுக்கெதிரான ஆணைக்குழு உடனடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.’ எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் ஒத்திவைப்புடன் ஏற்பட்ட இந்த நிலவரம் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு மிகவும் பொருத்தமான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதை TISL நிறுவனம் இதற்கு முன்னரும் பொதுமக்களின் கவனித்திற்கு கொண்டுவந்திருந்தது.

‘பாரியளவிலான பணம் கைமாற்றப்படுதல் தொடர்பாக அமைச்சர்களால் விடுக்கப்பட்ட அறிக்கைகளினூடாக இது உறுதிப்படுத்தப்படுவதாக மேலும் அவர் தெரிவித்தார். இந்தச் சூழலை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கும் சட்டவாட்சியை நிலைநிறுத்தி மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழு உடனடியாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments