உதைபந்து விளையாடவேண்டாம் என்கிறார் ரணில்


அரசமைப்புடன் ‘உதைப்பந்தாட்டம்’ விளையாடக்கூடாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

“ உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நாம் மதிக்கின்றோம். அரசமைப்பை கிழிப்பதற்கு முற்பட்டவர்களுக்கு இது சிறந்தபாடமாகும். அரசமைப்பை எட்டிஉதைத்துவிட்டு முன்நோக்கி பயணிக்கமுடியாது என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, அரசமைப்புடன் உதைப்பந்தாட்டம் விளையாடவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

நாளை நாடாளுமன்றத்துக்கு செல்வோம். நாடாளுமன்றத்தை ஜனாதிபதியே கூட்டினார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்” என்றும் பிரதமர் கூறினார்.

No comments