சபாநாயகருக்கு செல்வமும் பாதுகாப்பு


நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலையையடுத்து, பெரும் போராட்டத்தின் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.
இதன் பிறகே பிரதமர் மஹிந்த மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வெளியேறினர்.
சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைகளின் போது, சபாநாயகரை நோக்கி சில பொருட்கள் வீசப்பட்டன. சபாநாயகரின் அக்கிராசனத்தில், நீரும் ஊற்றப்பட்டது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், சபாநாயகருக்கு கடும் பாதுகாப்பை வழங்கினர்.
அதிலும் குறிப்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னணியில் பாதுகாப்பாக நின்றிருந்தார்
இதன்போது ரணில் விக்கிரமசிங்க தனது ஆசனத்திலிருந்து எழுந்திருக்கவில்லையென்பதுடன், இவருக்கு சத்துர சேனாரத்ன  மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்தார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஸவுடன் சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் உள்ளிட்ட பலர் தீவிரமாக ஏதோ கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் கருணாரத்ன சபாநாயகரின் மேசையில் இருந்த மைக்ரோ போனை எடுக்க முயன்ற​ ​போது, கையில் காயம் ஏற்பட்டு இரத்தத்துடன் வெளியேறியமைக் குறிப்பிடத்தக்கது.
குழப்ப நிலைகளுக்கு மத்தியில், ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவின் திசாநாயக்கவுக்கிடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதனிடையே சபையிலிருந்து செங்கோலும் அகற்றப்பட்டது.

No comments