சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்


நாடாளுமன்றில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் சபையில் ஏற்பட்ட குழப்ப நிலையால், சபை அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் சபையில் இருந்து வெ ளியேறிய சபாநாயகர் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்காத நிலையில், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சபைக்குள் இருக்கின்றனர்.

No comments