போட்டுப்பிடிக்கின்றது சிங்கள தேசம்?


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பதாக இருந்தது.ஆனால் இறுதி நேரத்தில் அந்த சந்திப்பு கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரதமர் மகிந்த மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் ஆசனங்களில் அமர்வதற்கு முன்னதாக அங்கு செல்ல ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தெரியவந்ததையடுத்தே மைத்திரி சந்திப்பினை விலக்கிக்கொண்டதாக தெரியவருகின்றது.

இதனிடையே அரசாங்கத்தின் மீதான குற்றசாட்டுக்கள் , ஜனாதிபதி மீதான கொலை முயற்சி என்பவற்றின் தொடர்ச்சியே நான் பிரதமர் பதவியினைறே;றமையாகும். அதன் அடிப்படையில் நாட்டையும் , ஜனாதிபதியையும் காப்பாற்றவே நாம் தற்காலிக அரசை அமைத்தோம். அதற்கு எதிராகவே சிலர் நீதிமன்றம் சென்று , தற்போது பின்கதவால் ஆட்சி அமைக்க வந்துள்ளார்கள். சபாநாயகர் அரசியலமைப்ப மீறி செயற்படுகின்றார். வாழ்க்கை செலவு அதிகரித்து உள்ளது. இன்று நள்ளிரவு பெற்றோலின் விலையை எம்மால் குறைக்க முடியுமென மஹிந்த தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது அரசாங்கம் இல்லை,- அமைச்சர்கள் இல்லை, பிரதமரும் இல்லையென ஜக்கிய தேசியக்கட்சியினர் கூச்சலிட பிரதமர் என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் வெறுமனே உறுப்பினர் என்றாலும் மகிந்தராஜபக்ஷ மகிந்த ராஜபக்ஷதான் என மகிந்த ராஜபக்ஷ ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே சபை இன்னும் ஒத்திவைக்கப்படவிலை - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான மோதல் ஒன்றை சஜித் பிரேமதாஸ தலையிட்டு தணித்தார்.இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீவிரநிலைப்பாட்டில் சபாநாயகர் இருப்பதாக தெரிகிறது.

அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த லக்ஷ்மன் கிரியல்ல யோசனை முன்வைத்துள்ளதுடன் சபாநாயகர் சபையின் அனுமதியை கோரியுள்ளார்.

No comments