பெரும் குழப்பத்தின் மத்தியில் தீர்மானம் வெற்றி!

பெரும் குழப்பத்துக்கு மத்தியில், சபாநாயகர் காவற்துறை பாதுகாப்புடன் சபைக்கு வந்தார்.

காவற்துறை மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.

சபாநாயகர் ஆசனம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களது கட்டுப்பாட்டில் இருந்ததால், சபாநாயகர் நின்றிருந்தபடி பிறிதொரு ஒலிப்பெருக்கியில் தமது அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிலையியல் கட்டளை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்குமாறு சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கோரினார்.

சுமந்திரன் அதனை முன்வைத்தப் பின்னர், அதனை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோரியதற்கு அமைவாக, பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையின் முதல்வசனத்தை நீக்கிவிட்டு சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கோரினார்.

அதன்படி குறித்த அவநம்பிக்கை பிரேரணை ஜேவிபியின் தலை

வர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைக்க அதனை விஜித்த ஹேரத் வழி மொழிந்தார்.

அதற்கு ஆதரவானவர்களை கோசம் எழுப்புமாறு சபாநாயகர் கோரிய போது, சபையில் பேரிரைச்சல் எழுந்தது. ஆம் என்ற குரல் ஒலித்தது.
அந்த பிரேரணைக்கு எதிரானவர்களை கோசம் எழுப்புமாறு சபாநாயகர் கோரிய போது அமைதி நிலவ ஆரம்பித்தது.
இதன்படி அவநம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதேநேரம் சபை அமர்வினை எதிர்வரும் 19ம் திகதி பி.ப 1 மணி வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

No comments