குறுக்கோட்டம் ஓடும் தமிழரசு தலைகள்!


வடமாகாண ஆளுநருடனான நெருக்கத்தை பயன்படுத்தி தமிழரசுக்கட்சியின் யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் தன்னிச்சையாக வருமானம் தரும் தொழிலில் குதித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாநகரசபையில் ஏற்கனவே தனக்கு சொகுசு வாகனமொன்றை கொள்வனவு செய்ய ஏற்பாடுகளில் மும்முரமாகியிருப்பதுடன் தற்போது புதிய வாகனங்கள் சிலவற்றினை கொள்வனவு செய்ய ஆளுநருடன் நேரில் உரையாடி அனுமதி பெற்றிருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதற்கு உள்ளுராட்சி ஆணையாளர்,பிரதமர் செயலாளர் ஆகியோர் தற்போதைய நிதி நெருக்கடியில் வீண் செலவுகளை தவிர்க்க ஆலோசனை வழங்கியபோதும் ஆளுநர் ஆனோல்ட் உத்தரவை நிறைவேற்ற பணித்துள்ளாராம்.
குறிப்பாக குறித்த மாநாகரசபை நிதியில் உயரமான கட்டடங்களிற்கு வர்ணம் பூசும் இயந்திரங்களை கொள்வனவு செய்யவும் ஆனோல்ட் முற்பட்டுள்ளதாக எதிர்தரப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதனிடையே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்தில் அண்மைக்காலமாக ஆர்வமாக செயற்பட்ட அவர் அரசில் இணைந்தால் தனது பிரசன்னத்தில் அரசியல்கைதிகளை விடுவித்து மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டலாமென ஆலோசனை தெரிவித்துள்ளார்.

வர்த்தகரான குறித்த எம்.பிக்கு ஒதுக்கப்படும் அமைச்சு பதவி குறித்த சர்ச்சையே தற்போது நீடித்து வருகிறது. வர்த்தகத்துடன் தொடர்புடைய கபினெட் அமைச்சொன்றை எம்.பி கோரியுள்ளபோதும், மஹிந்த தரப்பு அதை வழங்க சம்மதிக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments