மாகாணமா?நாடாளுமன்றமா?:எது முதலில்!


கொழும்பு அரசியல் குழப்பத்தின் மத்தியில் தேர்தலிற்கான ஏற்பாடுகள் உச்சமடைந்துள்ளது.எதிர்வரும் 5ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றில் மஹிந்த தரப்பு வெற்றியடைந்தாலும் வரவு செலவு திட்டத்தில் தோல்வியடைய வைப்பதன் மூலமே நாடாளுமன்றை கலைக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே மாகாண சபைத் தேர்தலினை நடத்துவதன் மூலம் மாகாண ரீதியில் கட்சியை பலப்படுத்த மஹிந்த விரும்புகின்றார்.

இதனிடையே நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியை தனிக்கும் நோக்கில் உடனடியாக தேர்தல் ஒன்றிற்குச் செல்ல எண்ணும் ஜனாதிபதி அதற்காக தேர்தல்கள் ஆணைக் குழுவினை நேற்று முன்தினம் தனது அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடியுள்ளார். 

குறித்த சந்திப்பில் ஜனாதிபதி உடனடியாக தேர்தலை நடாத்த அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு கோரினார். அவ்வாறு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதாயின் புதிய சட்டத்தின் பிரகாரம் பல குறைகள் உள்ளன அவற்றை நிவர்த்தி செய்தாள் மட்டுமே உடன் நடாத்த முடியும் குறிப்பாக தேர்தல் செயல்பாட்டிற்கான படிவ முறைகளும் தேர்தலிற்கான வேட்பு மனுவிற்கான கட்டுப்பணம் போன்றவை புதிய சட்டத்தில் புறிப்பிடப் படாத காரணத்தினால் அவற்றிற்கான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். என ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார்.

இவ்வாறு திருத்தம் செய்யும் பணிக்காக முன்னாள் நீதி அமைச்சரும் தற்போதைய புதிய அமைச்சரவையின் கல்வி அமைச்சருமான விஜயதாச ராயபக்சாவிடம் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயார் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தயாரிக்கும் அமைச்சரவைப் பத்திரம் முதலாவது அமைச்சர் வாரியத்திற்கு சமர்ப்பிக்கப்படும் . அதன் அடிப்படையில் குறித்த சட்டத் திருத்தம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வந்தே தீரும்.

அந்தச் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் எதிர் வரும் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டே ஆக வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடன் முன்கொண்டு செல்லுங்கள் என ஜனாதிபதி உத்தரவு ஒன்றை தேர்தல்கள் ஆணைக்கெழுவிற்கு பிறப்பித்தார்.

தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உரிய குழுவின் சிபார்சு முறைப்படி கிடைத்தால் எந்த வேளையும் தேர்தலை நடாத்த தயாராகவே உள்ளோம். இதற்கான அறிவித்தலை நாடாளுமன்றக் குழு முறைப்படி அறிவித்தல் வழங்கும் பட்சத்தில் அதற்கான பணி இடம்பெறும் என ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியா பதிலளித்துள்ளார்.

No comments