எல்லையில் யானையும் காவல்துறையும் தொல்லை!


வவுனியாவின் எல்லைக்கிராம மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டு கொள்ளாத அரசு மறுபுறம் வெடுக்குநாறி மலை தொடர்பில் கண்ணில் எண்ணெயினை விட்டவாறு காவல் காத்துவருகின்றனது.

நெடுங்கேணி ஒலுமடு பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பெருமளவிலான பலன் தரக்கூடிய தென்னை. மா பலா. வாழை.போன்றன மரங்கள் அழிவுக்குள்ளாகிவருகின்றது. நாளுக்கு நாள் படையெடுத்து வரும் யானைகளால் இவை அழிக்கப்பட்டு வருகிறது.

காட்டு யானைகள் தற்போது வீடுகளை குறி வைத்துள்ளன.யானைகளின் படையெடுப்பால் எல்லைப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் இரவுப்பொழுதினை கழிப்பதற்காக அயல் கிராமங்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் இப்பிரதேச மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகிறார்கள். யானைகளது வருகையினை கட:டுப்படுத்த பாதுகாப்பு மின்வேலிகளை மிகவும் விரைவாக அமைத்து தரவேண்டுமென்ற எல்லைக்கிராம மக்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாதேயிருக்கின்றது.

ஆனால் இது பற்றி வாய் திறக்க மறுக்கின்ற அரசு மறுபுறம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தண்ணீர் பிரச்சினையினை தீர்க்க குழாய்கிணறு ஒன்றினை அமைக்க ஆலய நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளது.

நேற்றைய தினம் குழாய்கிணறு அமைப்பதற்கான இயந்திரம் வருகை தந்திருந்த நிலையில் மோப்பம் பிடித்துக்கொண்ட நெடுங்கேணி காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.ஏற்கனவே அங்கு நிறுவப்படவிருந்த ஏணி அமைப்பு பணியினையும் காவல்துறை தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments