இப்போது ஜனநாயகம் பேசும் சம்பந்தன் இனப் படுகொலையின்போது எங்கு சென்றார்

தனது தமிழினம் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது யுத்தத்தை நிறுத்த வயியுறுத்தாது மௌனம் காத்த இரா.சம்பந்தன் இன்று ஜனநாயகம் அழிந்துவிடப்போகிறது

என குரலெழுப்புவது ஆச்சரியமாக உள்ளது என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தை நிறுத்த கோரிக்கை ஒன்றை முன்வைக்குமாறு பல நாடுகள் கேட்டுக்கொண்ட போதும் கூட வாய் திறக்காத இரா.சம்பந்தன், தற்போதுஜனநாயகத்தை நிலைநாட்ட அல்லும் பகலும் அயராது உழைத்துக்கொண்டிருப்பவர்போல தன்னை காட்டிக்கொண்டிருக்கிறார்.

இது அவர்  ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது அனைவருக்கும் அப்பட்டமாகவே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments