யாழப்பாணம் வந்தாராம் யாழின் மைந்தன்?


ஈபிடிபி கட்சியின் செயலாளரும் புதிய மஹிந்த அரசின் அமைச்சருமான டக்ளஸ் தனது உத்தியோகபூர்வ கடமை நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று பங்கெடுத்துள்ளார்.வன்செயல்கள் காரணமாக பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது.

மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சரான டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மற்றொரு அமைச்சரான மஸ்தானும் பங்கெடுத்திருந்தார்.

இதனிடையே டக்ளஸ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றிருந்த நிலையில் அவரது கட்சியினர் யாழ்.மாவட்ட செயலகம்,யாழ்.நகர் மற்றும் கண்டிவீதியில் பேனர்கள்,சுவரொட்டிகளென களமிறங்கியிருந்தனர்.

யாழ்ப்பாண இளைஞர்கள் பேரில் கட்சியினரால் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள்,பேனர்களில் யாழின் மைந்தனே என விழிக்கப்பட்டுள்ளதுடன் அவை வீதிகளில் தொங்கவிடப்பட்டிருந்தது.

No comments