அனுராதபுரம் நகரை சென்றடைந்தது நடைபயணம்


அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைபவனி அநுராதபுரதம் நகரத்தை சென்றடைந்துள்ளது.காலை மதவாச்சியிலிருந்து புறப்பட்ட மாணவர்களின் நடைபயணம் மதியம் அனுராதபுரம் நகரை அடைந்துள்ளது.

இதனிடையே மாணவர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தவர்கள்,மதத்தலைவர்கள் என பலரும் தற்போது இணைந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் வருகை தந்து கொண்டிருந்த நிலையில் அனுராதபுரத்தில் நடைபயணத்திலீடுபட்ட மாணவர்களது பேரணியினை வேடிக்கை பார்த்திருந்தார்.

எனினும் அது மாணவர்களினை உற்சாகப்படுத்தும் பார்வையென அவரது கட்சியான ஈபிடிபி தெரிவித்துள்ளது.

இதனிடையே அனுராதபுரத்தில் பரவலாக இன்று இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.ஆயுதங்கள் சகிதம் மாணவர்களின் பேரணி பயணித்த இடமெங்கும் அவர்கள் கண்காணிப்பிலீடுபட்டுள்ளனர்.
நடைபயணத்திலீடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஏனைய தரப்புக்கள் இணைந்து பிற்பகல் அனுராதபுரம் சிறையினை சென்றடைவரென எதிர்பார்க்கப்படுகின்றது.
அங்கு அவர்கள் போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட கோருவதுடன் தாம் அதனை பொறுப்பேற்பது தொடர்பிலான உறுதி உரையினை வழங்குவரென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments