அமெரிக்க எச்சரிக்கையை மீறி சிறிலங்கா துறைமுகங்கள் சீனாவிடம் !


ரணில் மைத்திரி அரசாங்கம் சீனாவிடம் சிறிலங்காவை விற்றுவருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் ரணில் மைத்திரி அரசு தொடர்ச்சியாக சீனாவின் உதவிகளையே நாடிவருகின்றது.

அண்மையில் அமெரிக்க துணை ஜனாதிபதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கடற்படை முகாம் உள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இக் குற்றச்சாட்டு வெளியாகி ஒருசில நாட்களுக்குள் சிறிலங்காவின் துறைமுக துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சீனாவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட, சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, சீனாவின் போக்குவரத்து அமைச்சர், லி ஷியாவோபெங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போதே, சிறிலங்காவின் துறைமுக துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வது பற்றிப் பேசப்பட்டுள்ளது.

சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசநாயக்கவும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றார்.

சீனப் போக்குவரத்து அமைச்சருடன், சீனாவின் நீர்ப் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஜெனரல் லி தியன்பி, அனைத்துலக ஒத்துழைப்பு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், ஷாங் ஷியாவோஜி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

No comments