துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யானை!!

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காட்டு யானை ஒன்றின் சடலம் கஹடகஸ்திகிலிய, பம்ரகெல கிராமத்திற்கு அருகில் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டு யானை செய்கை நிலத்தில் விழுந்து கிடந்ததை கண்ட கிராமவாசி ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கியதை அநுராதபுரம் வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவொன்று வந்து உயிரிழந்த யானையை மீட்டுள்ளனர்.

இந்த காட்டு யானை மூன்று நாட்களுக்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

சுமார் 25 வயதுடைய நான்கரை அடி உயரம் கொண்ட காட்டு யானையே உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

#elephant #elephant dead

No comments