தமிழரசிடம் அடைக்கலமானாரா அனந்தி?

வடக்கு மாகாண சபையை கடுமையாக விமர்சித்து வெளியே கருத்து வெளியிட்டு வரும் வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் இறுதியில் திழரசுக்கட்சி காலில் வீழ்ந்துள்ளார்.
மாகாண சபையின் கடந்த பல கூட்டங்கள் கூச்சல், குழப்பங்கள் நிறைந்ததாகவும் மக்களால் விமர்சிக்கப்படும் சபையாகவும் பொழுது போக்கு சபையாகவும் வட மாகாண சபை காணப்படுவதாக, வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விவகாரம் கடந்த அமர்வில் சூடுபிடித்திருந்தது.இந்நிலையில் அனந்தி தனது அமைச்சிற்கென ஆளுநர் நிதியத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நிதியை அமைச்சரவை அங்கீகாரமின்றி தன்னிச்சையாக செலவு செய்த விவகாரம் சூடுபிடித்திருந்தது.
அனந்தியை பழிவாங்கும் துருப்பு சீட்டாக அவைத்தலைவர் அதனை பயன்படுத்திக்கொண்டதுடன் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்படாது செலவு செய்த நிதியை அனந்தியே மீளளிக்கவேண்டுமென்ற துருப்புச்சீட்டை தூக்கிப்போட்டதாக சொல்லப்படுகின்றது.இதனால் பல மில்லியன்களை செலுத்தவேண்டுமென்ற சூழல் ஏற்பட்டிருந்தது. 

பண விவகாரமென்றால் எதற்கும் காவடியெடுக்க தயாராகவுள்ள அனந்தி இதன்றினையடுத்து அவைத்தலைவரின் காலில் வீழ்ந்ததுடன் மன்னிப்பு கோரி கடிமெழுதிக்கொடுத்ததாகவும் அவைத்தலைவர் தனது நெருங்கிய  வட்டாரங்களிடம் செய்தியை கசிய விட்டுள்ளார்.

ஏற்கனவே கைத்துப்பாக்கி கோரி அரசிடம் விண்ணப்பித்த விவகாரம் தொடர்பான சூடு ஆறமுன்னதாக இதனை தூக்கி பிடிக்க தமிழரசு தரப்பு தயாராகியிருந்த போதும் அனந்தி காலில் வீழ்ந்ததையடுத்து விடயத்தை அவை தலைவரது ஆலோசனையினையடுத்து கைவிட்டதாக சொல்லப்படுகின்றது. 

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரது கூட்டங்கள் போன்றவற்றினை தவிர்த்து அவைத்தலைவருடன் ஜக்கியத்தை காண்பித்துவருவதாக அனந்தி மீது உள்ளக வட்டாரங்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துவருகின்றன.

No comments