சமஷ்டித் தீர்வை தர முடியாது என்கிறார் மகிந்த



“சிறிலங்கா சிறிய நாடு.  நாங்கள் நாட்டை பிரித்து சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது. அதற்கான சாத்தியம் முற்றாக இல்லை” எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச, நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அதிகாரங்களைப் பகிர்ந்து தருமாறு கேட்கவில்லை. அரசியல்வாதிகள் தான் அதனைக் கோருகிறார்கள். தமிழ் மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்தியைத் தான் கேட்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஆட்சியில் இருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேசத் தயாராக இருக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க தமக்கு சிறந்த தீர்வை வழங்குவார் என அவர்கள் கருதினர்” என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments