மகிந்தவை அடுத்த ஜனாதிபதி என அறிமுகப்படுத்திய சுப்பிரமணிய சுவாமி


சிறிலங்காவின் ஜனாதிபதியாக விரைவில் பொறுப்பேற்கப் போகிறவர் என்று  புதுடெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் மகிந்த ராஜபக்சவை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

சுப்ரமணியன் சுவாமி தலைமை வகிக்கும் விராட் ஹிந்துஸ்தான் சங்கமே, நேற்றைய கருத்தரங்கிற்கு ஒழுங்கு செய்திருந்தது.

இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்த சுப்ரமணியன் சுவாமி, மகிந்த ராஜபக்சவை அறிமுகப்படுத்தி வைத்த போதே, விரைவில் சிறிலங்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்கப் போகிறவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்னணித் தலைவரான மகிந்த ராஜபக்ச, விரைவில், சிறிலங்கா ஜனாதிபதியாகவுள்ளவர்.

தீவிரவாதத்துக்கு எதிராக அவர் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தவர். அதனை தனது நாட்டில் இருந்து வேரோடு அகற்றியவர்.

அதன் விளைவாக, சிறிலங்கா இன்று அனைத்துலக முதலீடுகள் விரும்பப்படும் ஒரு இடமாக மாறியிருக்கிறது” என்றும் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

No comments