4ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018!


தொடர்ச்சியாக, 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும்  ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது.

 நிகழ்வு  ஒக்டோபர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மஜஸ்டிக் திரையரங்கில் மாலை 5.45 மணிக்கு ஆரம்பித்து, விருதுகள் வழங்கும் நிகழ்வு அதே திரையரங்கில் ஒக்டோபர் 8ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு இடம்பெறும்.

விழாவின்  ஆரம்பத் திரைப்படமாக, ‘ த யங் கார்ல் மார்க்ஸ்’ (இயக்குனர் ஜேர்மனியைச் சேர்ந்த ரவூல் பெக் - (2017Æ18)), முடிவுநாள் திரைப்படமாக ‘சுவீற் கன்றி’ (இயக்குனர் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வாரிக் தோன்ரன்’  (2017 Æ 113)) ஆகியன திரையிடப்படுகின்றன.

மூத்த தலைமுறைக் கலைஞர்களைப் பாராட்டி கௌரவிக்கவும், இளம் தலைமுறை திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் இவ்விழாவில் - வாழ்நாள் சாதனையாளர், சிறந்த முழுநீள அறிமுகத் திரைப்படம், மிகச் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படம், சிறந்த இலங்கை குறுந் திரைப்படம், மிகச் சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படத்துக்கான பார்வையாளர்  விருது என 05 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்விழாவின் பிரதான அரங்குகளாக மஜெஸ்டிக் கொம்ப்ளெக்ஸ் - கார்கில்ஸ் சதுக்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கம்; மற்றும் யாழ். நூலகக் கேட்போர் கூடம் ஆகியன அமையவுள்ளன. தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பிரித்தானிய கவுன்ஸிலிலும், அமெரிக்கன் கோர்னரிலும் இடம்பெறும்.

விழாவினை நடாத்த உதவும் ஏனைய பங்காளிகளாக - அரசாங்கத் திரைப்படப் பிரிவு, திண்ணை ஹோட்டல்ஸ், ஆண்ட்ரூ டிரவல்ஸ் கொம்பனி, யாழ். ஊடக அமையம், சூரியன் எவ். எம்., கோதே இன்ஸ்ரியூட், கிரைசலீஸ்  மற்றும் ஜி.ஐ. சட் ஆகியவை அமைகின்றன.

No comments