யுவதி தூக்கில் தொங்கித் தற்கொலை!


வவுனியா- சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

சாம்பல் தோட்டம் ஜயப்பர் வீதியில் வசித்து வரும் 22வயதுடைய யுவதியே தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி கொழும்பிலுள்ள ஆடை தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லுவதற்கு குடும்பதாரிடம் அனுமதி கோரியுள்ளார்.

கொழும்பு செல்வதற்கு குடும்பத்தினர் மறுத்த சமயத்தில் வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments