உந்துருளி விபத்து! இரு இளைஞர்கள் பலி!

வெள்­ளாங்­கு­ளம் சந்­திக்கு அண்­மை­யில் நேற்று வியாழக்கிழமை மாலை நடந்த விபத்­தில் இளை­ஞர்­கள் இரு­வர் உயி­ரி­ழந்­த­னர். உந்­து­ரு­ளி­யும், கன்­ரர் ரக வாக­ன­மும் விபத்­துக்­குள்­ளா­ன­ தில் உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இளை­ஞர்­களே உயி­ரி­ழந்­த­னர்.

நட்­டாங்­கண்­ட­லைச் சேர்ந்த அந்­தோனி சுரேஸ் (வயது-23, ஒட்டன்குளத்­தைச் சேர்ந்த சிவ­கு­மார் புனி­த­கு­மார் (வயது-24)) ஆகியோரே உயி­ரி­ழந்­த­னர்.

விபத்து வெள்­ளாங்­கு­ளம் சந்­திக்கு அண்­மை­யாக மாங்­கு­ளம் – துணுக்காய் வீதி­யில் நடந்­துள்­ளது. வெள்­ளாங்­கு­ளத்­தில் இருந்து மல்லாவி நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இளை­ஞர்­கள் பார­வூர்தி ஒன்றை முந்­திச் செல்ல முற்­பட்­ட­போது எதிரே வந்த கன்­ரர் ரக வாகனத்­து­டன் விபத்­துக்­குள்­ளா­கி­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது.

விபத்­தில் ஒரு­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். மற்­றை­ய­வர் மருத்­து­வ­மனை கொண்டு செல்­லும் வழி­யில் உயி­ரிழந்­தார்.

உயி­ரி­ழந்த இளை­ஞர்­கள் உற­வி­னர்­கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

விபத்­துத் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வரு­கின்­ற­னர்.

No comments