ராஜித கோட்டா: சம்பந்தனின் வேலை வாய்ப்பு!
அரசியல் தீர்வு கிட்டும் வரை இளைஞர் யுவதிகளிற்கான அரச நியமனங்களை கோரப்போவதில்லையென தெரிவித்திருந்த கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்,தற்போது கமுக்கமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடமிருந்து பெற்ற கோட்டாவில் தனது ஆதரவாளர்களிற்கு நியமனம் வழங்க தொடங்கியுள்ளார்.
அவ்வகையில் சுகாதார அமைச்சரின் ஊடாக நியமனம் பெற்ற 30 பேர் திருகோணமலையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் தமது அரச கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு கோரி தன்னிடம் வருகை தந்திருந்த வேலையற்ற பட்டதாரிகளிடம் அரச நியமன சலுகைகளை கேட்டால் தன்னால் அரசுடன் அரசியல் தீர்வு கோரி போராடமுடியாதென இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்து முக்கிய பேசுபொருளாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது சத்தம் சந்தடியின்றி சுகாதார அமைச்சர் ராஜிதவிடமிருந்து பெற்றுக்கொண்ட கோட்டா அடிப்படையில் தனது ஆதரவாளர்களை கொண்டு வெற்றிடங்களை நிரப்ப சம்பந்தன் முற்பட்டுள்ளார்.
ஏற்கனவே திருகோணமலையில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சில் தனது ஆட்களை நிரப்பிக்கொண்ட இரா.சம்பந்தன் தற்போது திருகோணமலை தாண்டி யாழ்ப்பாணத்திலும் ஆட்களை நிரப்ப தொடங்கியுள்ளார்.
முன்னைய காலங்களில் தனது ஆதரவாளர்களிற்கு கோட்டாவில் அரச வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதில் இரா.சம்பந்தன் பிரசித்தமானவரென அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
Post a Comment