சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலையை  158 ரூபாவால் அதிகரிக்க, வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

12.5 கிலோகிராம் எடையுடைய, சமையல் எரிவாயுவின் விலையினையே இவ்வாறு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த  விலை உயர்வு நாளை சனிக்கிழமை (25) நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படுவதற்கு அமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய, சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,696 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments