ஜனாதிபதி செயலணி வேண்டாம்:சம்பந்தனை சந்திக்கும் விக்கி?


ஜனாதிபதி செயலணியை புறக்கணிப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக தனியொருவராக வடக்கு முதலமைச்சர் மட்டுமே உள்ளடகப்பட்டிருந்த செயலணியை தான் நிராகரித்ததன் மூலம் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் தகவல் சொல்லிவிட்டதாக முதமைச்சர் கருதுகின்றார்.இந்நிலையில் விருந்தாளிகளான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயலணியில் புதினம் பார்க்க செல்வது கேலிக்குரியதாகிவிடுமென முதலமைச்சர் கருதுகின்றார்.

இதனிடையே இது குறித்து பேச விடுக்கப்பட்ட அழைப்பினை வடக்கு மாகாண சபை தேர்தலில் இடம்பிடிப்பதற்கான சந்தர்ப்பமாக தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட தகவல் பிரகாரம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை வரையில் முதலமைச்சர் பொழும்பிலேயே தங்கியுருப்பார் எனவும் அக்காலப்பகுதியில் கூட்டமைப்பின் தலைவரை சந்திக்க ஆர்வம் கொண்டுள்ளதாக நேரம் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் குறித்த விடயத்தை தெரியப்படுத்திய போதும் தான் 
சந்திப்பேனா என்பது தொடர்பில் எதனையும் பிரஸ்தாபித்திருக்கவில்லையாம்.

No comments