ஒட்டுசுட்டான் கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் சீருடை, கிளை­மோர் உள்­ளிட்ட வெடிபொ­ருள்­கள் ஒட்­டுசுட்­டா­னில் மீட்­கப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்பு­டைய சந்­தே­கத்­தில் முன்­னாள் போராளி உள்­பட இரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.

கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி இந்த வெடி­பொ­ருள்­கள் மீட்கப்பட்டிருந்­தன. இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய 7பேர் ஏற்கனவே கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், கடந்த 20ஆம் திகதி, கிளி­நொச்சி சாந்­த­பு­ரம் மற்­றும் மல்­லா­வி­யைச் சேர்ந்த இரு­வர் கொழும்பி­லி­ருந்து வந்த பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­ன­ரால் கைது செய்யப்­பட்­ட­னர்.

இவர்­கள் முல்­லைத்­தீவு மாவட்ட பதில் நீதி­வான் ரி.பரஞ்­சோ­தி­யின் இல்லத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இவர்­களை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­போது கிளை­மோர் உள்­பட வெடிபொருள்கள் மற்­றும் புலி­க­ளின் சீரு­டை­கள் என்­பன முச்­சக்­கர வண்­டி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்­டி­ருந்­தன. பொலி­ஸா­ரின் சுற்­றுக் காவல் நடவ­டிக்­கை­யின்­போது இவை கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.

இந்­தச் சம்­ப­வத்­தில் இரு­வர் தப்­பி­யோ­டி­யி­ருந்த நிலை­யில் அவர்­க­ளும் பின்­னர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். இரா­ணு­வத்­தி­ன­ரின் புல­னாய்­வுப் பிரி­வுக்கு தக­வல் வழங்­கு­ப­வர் ஒரு­வ­ரும் இந்­தச் சம்­ப­வத்­தில் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் தொடர் விசா­ர­ணை­கள் முன்னெடுக்கப்பட்டு வந்­தது. அவர்­க­ளின் அலை­பே­சிக்கு வந்த அழைப்புக்­கள் தொடர்­பி­லும் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

இதற்கு அமை­வாக கிளி­நொச்சி சாந்­த­பு­ரம் 8ஆம் வாய்க்­கா­லைச் சேர்ந்த 3 பிள்­ளை­க­ளின் தந்தை கடந்த 20ஆம் திகதி இரவு கைது செய்­யப்­பட்­டார். அதன் பின்­னர் மல்­லா­வி­யைச் சேர்ந்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

No comments