அணிதிரள மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவை


மகாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிராக  தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரழுமாறு மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

தமிழர்களின் பூர்வீக வாழ் இடங்கள் திட்டமிட்டு ஆழும் வர்க்கத்தினால் அபகரிக்கப்படுவதற்கு எதிர்பு தெரிவித்து மகாவலி எல் வலயம் ஊடாக முல்லைத்தீவு நகரின் மக்களின் காணிகள் அபகரிப்பதை தடுத்து நிறுத்த கோரியும் தமிழ்மக்களின் கிராமிய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஊடாக தமிழர் வாழ்இடத்தினைபாதுகாக்கும் நோக்கில் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பினை  முல்லைத்தீவில் நிறுவியுள்ளார்கள்
இது தொடர்பில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களான ஆம்ஸ்ரோங் அடிகளார் க.சுதர்சன்,வி.நவநீதன் ஆகியோர் 26.08.18 அன்று முல்லைத்தீவில் ஊடக சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார்கள்.

இந்த ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித் அருட்பணி ஆம்ஸ்ரோங் அடிகளார் அவர்கள்..

கடந்த முப்பது ஆண்டுகளாக போரினை நாங்கள் சந்தித்துள்ளோம் போரில் தோற்றுப்போயுள்ளோம் என்பதற்கு அப்பால் அரசின் திட்டமிடப்பட்ட பல்வேறு செயற்பாடுகளால் பல இழப்புக்களை சந்தித்த வண்ணமாக இருக்கின்றோம்
மகாவலி அபிவிருத்தி பற்றி பல கேள்விப்பட்டு இருக்கின்றோம் அதன் உள்விடயம் என்ன என்பது தொடர்பில் ஆராய்ந்த போது அது எங்கள் மக்களுக்கு பாரிய பாதிப்புக்களாக இருக்கின்ற ஒரு சூழலை அவதானிக்கின்றோம் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வடமாகாணமும் துண்டாடப்படுகின்ற ஒரு சூழல் ஆழமாக தெரிகின்றது.

இன்று இலங்கை அரசு தன்னுடைய கடந்த காலம் தொடக்கம் பல்வேறு முறைகளில் திட்டமிட்டு வடகிழக்கின் நிலப்பரப்புக்களை துண்டாடி சிங்களகுடியேற்றங்களை கொண்டுவந்து நிலப்பரப்பினை ஆக்கிரமித்து மக்களின் வீகிதாசாரங்களை மாற்றி மக்களின் அனைத்து விடயங்களிலும் ஒரு கேள்வியினை உருக்கியிருக்கின்ற சூழலை நாங்கள் பார்ப்போம்.

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் போருக்கு பின்னர் மிகவேகமாக முல்லைத்தீவு மண் கவனம் செலுத்தப்பட்டு நிலத்தின் பல பகுதிகள் இன்று சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கின்ற சூழலில் எமது மண்ணும் மக்களும் அபிவிருத்தி என்றபோர்வையில் மிகுந்த துன்பத்திற்குள்ளாகியுள்ளது.

இதனை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் முகமாக எதிர்வரும் 28 பாரிய ஒரு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம் இதன் ஊடாக சர்வதேசத்தில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் இலங்கை அரசிற்கு நெருக்குதல்களை கொடுத்து இந்த ஆக்கிரமிப்புக்களை உடனடியாக நிறுத்தும் படியான கோரிக்கையினை நாங்கள் முன்வைக்கின்றோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான க.சுதர்சன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

முல்லைத்தீவு மண்ணில் வாழ்கின்ற மக்கள் பல சவால்களை முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் மக்கள்தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொண்டிருக்கின்ற கடல் நிலவளங்கள் திட்டமிட்டவகையில் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது அண்மைக்காலத்தில் இதற்கு எதிராக அரசியல் வாதிகளும் அமைப்புக்களும் கண்டனங்கள் தெரிவித்தாலும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் அதற்கு எந்த விதமான பதில்களும் அரசில் இருந்து கிடைக்கவில்லை 

இதற்காக புதிதாக ஒரு அமைப்பினை மக்களாக உருவாக்கி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையினை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரியான பதிலினை தரவேண்டும் என்தபற்காகவும் எந்த விதமான அரசியல் சுயநலம் லாபம் கருதாத பொது அமைப்பாக மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை அமைப்பு உருவாகியுள்ளது.
மகாவலி அபிவிருத்தி திட்டம் காலங்காலமாக இலங்கை பாராளமன்றில் அதிகாரம் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக இது செயற்பட்டுக்கொண்டிருகின்றது.

எமது மக்கள் வடக்கும் கிழக்கும் ஒன்றி பிணைந்த மக்களாக இருந்தவர்கள் இது அரச தென்பகுதி சட்டவல்லுனர்களால் வடக்கு மாகணாம் கிழக்கு மாகாணம் என்று பிரிக்கப்பட்டுள்ளது அதன்பின்னர் மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது 

மீண்டு மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற வகையில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பாரிய  அளவிலான நிலத்தினை ஆக்கிரமித்து செய்து பெரியஅளவிலான வலுவினை அதிகாரத்தினை கொண்டுள்ள அதிகார சபை ஆக்கிரமிப்பினை மேற்கொள்கின்றது.

இது மக்களின் வயல் நிலங்களை,வளமான காடுகளை கடல்வளத்ததை சூறையாடுகின்ற செயலாக தம்மகத்தே கையகப்படுத்திக்கொள்கின்றார்கள். இதற்கான தடைசட்டங்களை போட்டு மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்க செய்துள்ளார்கள்.

இதற்காக ஒரு போராட்டத்தினை மேற்கொள்வதற் ஊடாக இதன் உண்மைநிலையினை வெளிப்படுத்துவதன் ஊடாகவும் உலக நாடுகளில் உள்ள மக்கள் அமைப்புக்கள் இதனை உற்றுநோக்கி தமிழர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை கண்டு கொண்டு அதற்கான சட்டநடவடிக்கையினை எடுக்க வேண்டும் என மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான க.சுதர்சன் தெரிவித்துள்ளார்.


அடுத்து மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது ...

தமிழர்களின் பூர்வீக நிலங்களும் வாழ்வாதார நிலங்களும் சிங்கள குடியேற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது வெலிஓயா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் முல்லைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

அது மட்டுமல்ல கொக்குளாயில் இருக்கின்ற விகாரை நாயாற்று பகுதியில் அமைக்க எத்தனிக்கப்படுகின்ற விகாரைகள் ஊடாக தமிழர்களின் வராலாறுகள் தி;ட்டமிடப்பட்டு திரிக்கப்பட்டு திட்டமிட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றத்தின் கருவியாகவே மகாவலி பயன்படுத்தப்படுகின்றது 

வடமாகாணத்தில் மகாவலி என்பது காணிகளை அபகரித்துக்கொள்வதற்கும் திட்டமிட்ட சிங்களகுடியேற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தும் கருவியாக காணப்படுவதால் அது தமிழர்களுக்கு இதுவரை எந்த பயனையும் பெற்றுத்தாரத காரணத்தால் அது ஆக்கிரமிப்பின் குறியீடாக காணப்படுவதால் வடமாகணத்தில் மகாவலியினை முற்றாக நிராகரிக்கின்றோம் 

எங்கள் கோரிக்கையாக வடமாகாணத்தில் உடனடியாக மகாவலியின் செயற்பாடுகள்நிறுத்தப்படவேண்டும் அண்மையில் உள்ள நடைமுறைகளை மீறி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச சபையினை மீறி செயற்பட்டு வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்து செய்யவேண்டும்

திட்மிட்ட ரதீதியில் தொல்லியல் திணைக்களம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வரலாற்று திரிப்பு நடவடிக்கை காணி அபகரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தவேண்டும்
மகாவலி எல் வலயத்திற்கு அப்பால் திட்டமிடப்படுகின்ற கே, ஜே வலயங்களின் ஊடாக வடமாகாணத்தின் இதயபூமிகளை துண்டாடி வடமாகாணத்தின் சனத்தொகையினை மாற்றி அமைத்து இனப்பரம்பலை மாற்றி அதன் ஊடாக தமிழர்களின் அரசியல் பலத்தினை சிதைக்க நினைக்கின்ற இந்த திட்டத்தை உடனே நிறுத்தவேண்டும்.

மகாவலி திட்டத்தின் ஊடாக அபகரிக்கப்படுகின்ற காணிகளின் அதிகாரங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசையிடம் இருக்கும் வரை தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்வு என்பது உப்பு சப்பற்றதாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த காணி அதிகாரங்களை மகாவலியிடம் விட்டுக்கொடுத்து விட்டு அரசோடு இனப்பிரச்சனை தொடர்பில் பேசுவதில் எந்த பயனும் இல்லை என்ற அடிப்படையில்  தமிழ் தலைமைகள் இந்த விடயத்தில் ஒன்று பட்டு உழைக்கவேண்டும் என்று பேர் அழைப்பினையும் விட்டு எதிர்வரும் 28.08.18 அன்று முல்லைத்தீவு நகரில் அமைதிவளியில் ஒரு பேரணியினை நடத்த இருக்கின்றோம் அந்த பேரணிக்கு அரசியல் கட்சி இனமத பேதங்களை கடந்து அனைத்து தமிழ்தேசிய ஆர்வலர்களும் ஒன்று திரளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments