இன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு


இலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பிரேரிக்கப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளிட்ட கட்சிகள் கால அவசாகசம் கேட்டு பிரேரணையை ஏற்க மறுத்துள்ளன.

குறித்த பிரேரணையில் இன அழிப்பு என்ற சொற்பதம் காணப்படுவதால் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் உறுப்பினரை ஈபிடிபி ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து தவிசாளராக தெரிவுசெய்து ஆட்சி செய்துவருகின்றன.

இந்நிலையில் வலிதெற்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சபை உறுப்பினர் சிவரூபன் லகீந்தன் நேற்றைய (13) சபை அமர்வில் குறித்த பிரேரணையை முன்மொழிந்தார். அதனை முன்னணி உறுப்பினர் கஜேந்திராஜா வழி மொழிந்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த பிரேரணையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் குறித்த பிரேரணையில் இன அழிப்பு என்ற சொற்பதம் காணப்படுவதால் தமது கட்சித்தலைமையுடன் கலந்தாலோசித்த பின்னரே ஆதரிக்க முடியும் என்று அடுத்த கூட்டம் வரை கால அவகாசத்தினை கேட்டுள்ளார்கள்.

இதேவேளை குறித்த பேரேரணை கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசை சபைகளில் நேற்று முன்மொழியப்பட்டபோது அவை குறித்த சபைகளில் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments