இராணுவ தென்னந்தோப்பு: ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் காணிகளில்!


யாழ்.மாவட்டத்தில் படையினரால் முன்னெடுக்கப்படுகின்ற தென்னை மரநடுகை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி. வடக்கிலுள்ள பொதுமக்கள் காணியிலேயே என்பது அம்பலமாகியுள்ளது.

யாழ்;.மாவட்ட இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராட்சி யாழில் ஒரு இலட்சம் தென்னைகளை நடும் திட்டம் பற்றி கூறிவருகின்றார்.அதற்கென தமிழ் இளைஞர்களை தொழிலாளிகளாக தெரிவு செய்தும் வருகின்றார்.

அவ்வாறு தென்னை நடுகை திட்டம் அமுல்படுத்தப்படுவது அப்பகுதியில் இராணுவ வசமுள்ள மக்களின் நிலத்திலேயே என தெரியவருகின்றது.வலி.வடக்கில் எஞ்சியுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள்; தற்போது கனரகவாகனங்கள் மூலம் இடித்து அழிக்கப்பட்டு அவை தரவைகளாக்கப்பட்டுவருகின்றது.அவ்வாறு தரவையாக்கப்பட்ட நிலத்திலேயே இராணுவத்தினர் தென்னைகளை நாட்டி தென்னந்தோட்டங்களை உருவாக்குவதாக தெரியவருகின்றது.

வலி . வடக்குப் பகுதியில் கட்டுவன் மற்றும் மயிலிட்டி தெற்கு பகுதியில் விடுவிக்கப்படாதுள்ள பகுதியில் எல்லையில் முட்கம்பி வேலி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு வேலி அமைக்கப்பட்ட பகுதியில் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்களில் உள்ள மக்களின் வீடுகள்,மதில்கள் என்பன பெரும் பற்றைகள் என்பன தற்போது கானப்படுகின்றன. இவ்வாறு கானப்படும் பற்றைகளை தற்போது இராணுவத்தினர் கனரக வாகன மூலம்; இடித்து அழித்துவருகின்றனர்.

பின்னர் குறித்த பகுதியில் தென்னைப் பயிர் செய்யை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments