பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை கண்மூடித்தனமாக பின்பற்றப் போவதில்லையாம்!

கடந்த கால ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை கண்மூடித்தனமாக பின்பற்றப் போவதில்லை என்று, காணாமல் போனோர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், டுவிட்டரில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று தொடர்பில் எமது சூரியன் செய்திகளுக்கு விளக்கமளிக்கும் போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக, கடந்த காலங்களில் செயற்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும், காணாமல் போனோரது உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் என்பவற்றையும், தமது அலுவலகம் கவனத்தில் கொள்ளும் என்று, அதன் தலைவர் சாலிய பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவ்வாறான விடயங்களை கண்மூடித்தனமாக பின்பற்றினால், வினைத்திறனான செயற்பாட்டை அந்த அலுவலகத்தினால் முன்னெடுக்க முடியாது என்று, டுவிட்டர் தளத்தில் பதிவாளர் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்கு பதில் வழங்கியுள்ள சாலிய பீரிஷ், குறித்த அறிக்கைகள் மற்றும் வாக்குமூலங்களை கருத்திக் கொண்டு செயற்படும் என்றாலும், அந்த அறிக்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமக்கான சுயாதீனமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையே காணாமல் போனோர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments