வேண்டாமென ஓடியவர் மானிப்பாய் திரும்பினார்!கூட்டமைப்பின் குழிபறிப்புக்களால் வலிகாமம் தெற்கு மேற்குப் பிரதேச சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து சென்ற நபர் மீண்டும் அதே பிரதேசசiபிய்ன தலைவராக தெரிவாகியுள்ளார்.


வலிகாமம் தெற்கு மேற்குப் பிரதேச சபையென்று அழைக்கப்படும் மானிப்பாய் பிரதேசசபையினில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் போட்டியிட்ட அந்தோணிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதற்கு முன்னராகவும் குறித்த பிரதேசசபையின் தலைவராக அவர் இருந்திருந்த போதும் அப்போது இடம்பெற்ற பாரிய குத்துவெட்டுக்களினால் அவர் ஒரு கட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து அரசியலே வேண்டாமென்று ஒதுங்கியிருந்தார்.


எனினும் சுமந்திரன் மற்றும் சரவணபவனின் ஆதரவுடன் தேர்தல் களம்புகுந்திருந்த அந்தோணிப்பிள்ளை ஜெபநேசன் தற்போது ஈபிடிபி மற்றும் தென்னிலங்கை கட்சிகளது ஆதரவோடு ஆட்சிக்கதிரையேறியுள்ளார்.

No comments