அநாதரவாக உடுப்பிட்டி நலன்புரி முகாம் மக்கள்?

 

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய காணிகள் விடுவிப்பு தொடர்கதையாக நீடிக்கின்ற நிலையில் வடமராட்சி உடுப்பிட்டியில் குடியமர்த்தப்பட்டிருந்த பலாலியைச்சேர்ந்த மக்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விரட்டப்பட்டுள்ளனர்.


உடுப்பிட்டியில் தனியார் காணி ஒன்றில் தங்கியிருந்த பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த 17 குடும்பங்கள் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவின்படி அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காணியின் உரிமையாளர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அரச காணி ஒன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.



தற்போது குடியமர்த்தப்பட்டுள்ள இடத்தில் குடிதண்ணீர், மலசலகூட வசதிகள் ஏதுமின்றி வெறும் பனை மரங்களின் கீழ் கைவிடப்பட்டுள்ளனர்.
இதனிடையே வல்வெட்டித்துறையில் அமைக்கப்படும் நீச்சல் தடாகக்கட்டுமானப் பணிகளை பார்வையிட வருகை தந்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து இடம்பெயர்ந்த மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் நீச்சல் தடாகத்தைப் பார்வையிட்ட அவரிடம் தமக்கு மலசலகூடங்களையேனும் அமைத்துதர அவர்கள் கோரியிருந்தனர்.


திறனற்ற வடமாகாணசபை தமக்கு எந்தவித உதவியையும் நல்கவில்லையெனவும் அம்மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

No comments