மகள் கழுத்து நெரித்து கொலை:தாய் படுகாயம்!வடமராட்சி கிழக்கின் அம்பன் பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண்ணொருவர் கழுத்து நெரித்துபடுகொலை செய்யப்பட்டுள்ளார்.அதேவேளை தாயும் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.பொதுமக்களால் மீட்கப்பட்ட தாயார் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது மேலதிச சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் அம்பன் பகுதியில் நேற்றிரவு நடைபெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 37 வயதான நல்லதம்பி ரேவதியென அடையாளங்காணப்பட்டுள்ளார்.படுகாயமடைந்த தாயார் நல்லதம்பி இராசம்மா என மேலும் தெரியவருகின்றது. சம்பவத்துக்கான காரணம் வெளியாகவில்லை. இது கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வீட்டில் குறித்த பெண்கள் இருவரும் தனித்திருந்ததாக சொல்லப்படுகின்றது.காலை வேளை அப்பகுதியில் சீவல் தொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் அடையாளம் கண்டு தகவல் வழங்கியதையடுத்தே கொலைச்சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் பாலியல் வல்லுறவின் பின்னரான கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
பிரதேச பரிசோதனையின் போது மேலதிக தகவல்கள் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments