மாந்தை ஜ.தே.கவிடம்:செட்டிக்குளமோ சுதந்திரக்கட்சியிடம்?


முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதரவுடன் ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைத்துக்கொண்டுள்ளது.

விடுதலைப்போராட்டத்தின் மையப்பகுதிகளுள் ஒன்றான மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பெரும்பான்மையின கட்சியிடம் வீழ்ந்தமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

ஐ.தே.கட்சி 4 ஆசனங்களையும்; சுதந்திரக் கட்சி இரண்டு ஆசனங்களையும் கொண்டிருந்தன. ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் இக்கூட்டிற்கு ஆதரவளித்ததையடுத்து ஆறு உறுப்பினர்களை கொண்டிருந்த கூட்டமைப்பு தோல்வியடைந்தது.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் செட்டிக்குளத்தை தொடர்ந்து பெரும்பான்மை தென்னிலங்கை கட்சியிடம் மாந்தை கிழக்குப் பிரதேசசபை வீழ்ந்துள்ளது.

No comments