120 அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிப்பதாக சீனா அறிவிப்பு!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் அது தொடர்பான 120 பொருட்களின் மீது 15 சதவீத கூடுதல் வரியும், பன்றி இறைச்சி மற்றும் அது தொடர்பான 8 பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரியும் உடனடியாக அமலுக்கு வருவதாக சீனா அறிவித்துள்ளது. இதற்குரிய அறிவிப்பை சீனா நேற்று திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த வரி விதிப்பால் சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் 3 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு முன்னர் அமொிக்க அதிபராக வந்த டொனால் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்தின் மீது 15 சதவீதம் முதல் 25 சதவீத கூடுதல் வரியை விதித்தார். அத்துடன் சீனாவின் முதலீடுகளுக்கு கடினமாக கட்டுப்பாடுகளையும் விதித்தார்.

இதனால் சீனாவில் இருந்து அமொிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கணிசமான வரியை செலுத்தவேண்டிய கட்டாயம் சீனாவுக்கு உருவானது. இதற்கு பதிலடி கொடுக்க சீனாவும் இந்த முடிவை எடுத்துள்ளது.

No comments