வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதி­யத்­துக்கு 4 ஆண்­டு­கால இழு­ப­றி­யின் பின்­னர் ஒப்­பு­தல்!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதி­யத்­துக்கு 4 ஆண்­டு­கால இழு­ப­றி­யின் பின்­னர் ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து, வடக்கு மாகாண ஆளு­நர் அலு வ­ல­கத்­துக்கு முத­ல­மைச்­சர் நிதிய நிய­திச் சட்­டத்­துக்கு அனு­மதி வழங்­கு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
வடக்கு மாகாண சபை­யின் தற்­போ­தைய ஆட்­சி­யின் ஆயுள் காலம் முடி­வ­தற்கு இன்­ன­மும் 5 மாதங்­களே எஞ்­சி­யி­ருக்­கும் நிலை­யில் இந்த அனு­மதி வழங் கப்­பட்­டுள்­ளது.
வடக்கு மாகா­ணத்­தின் புதிய ஆளு­ந­ராக அடுத்த மாதம் 2ஆம் திகதி பத­வி­யேற்­கும் சி.லோகேஸ்­வ­ரன், முத­ல­மைச்­சர் நிதிய நிய­திச் சட்­டத்­துக்­கான ஒப்­பு­தலை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வழங்­கு­வார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அன்­றைய தினம் மாகா­ணத்­துக்கு உட்­பட்ட சில இட­மாற்­றங்­க­ளும் வழங்­கப்­ப­டக் கூடும் என்று அறி­ய­மு­டி­கின்­றது.
வடக்கு மாகாண சபை 2013ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. 2014ஆம் ஆண்டு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதிய நிய­திச் சட்­டம் மாகா­ண­ச­பை­யி­னால் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆளு­ந­ரின் ஒப்­பு­த­லுக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது.
அப்­போ­தைய ஆளு­நர் மேஜர் ஜென­ரல் சந்­தி­ர­சிறி, சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தார்.
ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர், புதிய ஆளு­ந­ராக பளி­கக்­கார பத­வி­யேற்­றி­ருந்­தார். முத­ல­மைச்­சர் நிதிய நிய­திச் சட்­டம் மீள­வும் திருத்­தப்­பட்டு ஆளு­ந­ரின் ஒப்­பு­த­லுக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது.
சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­னால், ஒப்­பு­தலை வழங்­கு­மாறு ஆளு­ந­ருக்கு அறி­வு­றுத்­தல் வழங்­கப்­ப­ட­வில்லை. இத­னால் இழு­பறி நீடித்­தது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவை நேரில் சந்­தித்­தி­ருந்­த­போ­தும், முத­ல­மைச்­சர் நிதிய நிய­திச் சட்­டத்­துக்கு ஒப்­பு­தல் வழங்­கு­மாறு கோரி­யி­ருந்­தார்.
இந்த நிலை­யில், 4 ஆண்­டு­கால இழு­ப­றி­யின் பின்­னர் நிதிய நிய­திச் சட்­டத்­துக்கு ஒப்­பு­தல் வழங்க, சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் ஆளு­நர் அலு­வ­ல­கத்­துக்கு பணிப்­புரை விடுத்­துள்­ளது

No comments