தாய்லாந்தில் பேருந்து தீ பிடித்து விபத்து: 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து. இந்த நாட்டின் மேற்கு பகுதியில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள தாக் மாகாணத்தில் இருந்து தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். தலைநகர் பாங்காங் அருகே உள்ள தொழிற்சாலைக்கு பயணிகள் சென்று கொண்டு இருந்த போது உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தில் திடீரென தீ பிடித்தது.

 பேருந்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. இதில், பேருந்தில் இருந்த தொழிலாலர்கள் அலறி அடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற முயற்சித்தனர். 27 பேர் பேருந்தில் இருந்து வெளியேறிவிட்ட போதிலும் பின்பகுதியில் அமர்ந்து இருந்த 20 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.  இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாய்லாந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

No comments